Thursday, April 24, 2008

435. விவேகானந்தர் இல்லப் பிரச்சினை - தமிழக அரசு பல்டி ?

லேடி வில்லிங்க்டன் பள்ளிக்கு அருகில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில், தமிழ்ச் செம்மொழி மையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அரசின் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், "விவேகானந்தர் இல்லத்தை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் தமிழ் செம்மொழி மையம் அமையவுள்ளது" என்று வாய்மொழியாக அரசின் எண்ணத்தை மடத்தின் பொறுப்பாளர்களிடம் தெரிவித்ததாகவும், ஊடகங்களில் செய்திகள் வந்தன. 

மேலும், இது குறித்து ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் கூறியதாவது:

எங்களது மடத்திற்கு தொடர்பு கொண்ட தொழில் அதிபர் ஒருவர், "விவேகானந்தர் இல்லம் உள்ள இடத்தை முதல்வர் கருணாநிதி காலி செய்யச் சொல்லியுள்ளார். எனவே, காலி செய்து கொடுத்து விடுங்கள்' என எங்களது மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், "மடத்தின் தலைவர் வெளியூர் சென்றுள்ளார். அவர் 23ம்தேதி திரும்புவார். அவர் வந்ததும் தகவல் தெரிவித்து, முதல்வரை சந்திக்க சொல்கிறேன்" என பதில் தெரிவித்துள்ளார். பிறகு, மீண்டும் தொடர்பு கொண்ட அந்த தொழிலதிபர், "முதல்வரிடம் நீங்கள் சொன்னதை தெரிவித்தேன். உங்கள் தலைவர் 23ம்தேதி சென்னை திரும்பியவுடன் 24ம்தேதி இடத்தை காலி செய்து விடுங்கள். அதன் பின் வேண்டுமானால் என்னை வந்து சந்திக்கட்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்" எனக் கூறினார்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, அந்த தொழில் அதிபர் நேரடியாக முதல்வரின் பெயரைச் சொல்லி  வி.இல்லத்து மேலாளரை (இடத்தை காலி செய்ய வேண்டி) அரசியல் ரீதியாக அச்சுறுத்திய சமாச்சாரம் தான் :(

அரசின் கட்டாயத்தால், எங்கே வி.இல்லத்தை காலி செய்து கொண்டு ராமகிருஷ்ணா மடத்தினர் சென்று விடுவார்களோ என்று எண்ணிக் கொண்டு, பல வருடங்களுக்குப் பின் மீண்டும் விவேகானந்தரின் நினைவு இல்லத்துக்கு நேற்று ஒரு விசிட் அடித்தேன்.  நேற்று வி.இல்லத்திற்கு வார விடுமுறையாக இருந்தும், (நுழைவுக் கட்டணம் இல்லாமல்) எனக்கு ஸ்பெஷல் அனுமதி கிடைத்தது சுவாமி விவேகானந்தரின் அருள் தான் ! 

அமைதியான, ரம்யமான சூழல் !  இந்து சமயம் பற்றி ஒரு முகவுரை தரும் வகையில் போஸ்டர்களும், ஓவியங்களும், சுவாமிஜியின் அறிவுரைகளும், அவரது வாழ்க்கை குறிப்புகளும், புகைப்படங்களும், மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் காணப்பட்டன.  சுவாமிஜி, ராமகிருஷ்ணர் மற்றும் இந்து சமயம் சார்ந்த அருமையான புத்தகங்கள் விற்பனைக்கு இங்கு கிடைக்கின்றன. 

1893-இல் சிகாகோ உலக சமய பாராளுமன்றத்தில் சுவாமிஜி, உலகப் பிரசித்தி பெற்ற சமய / தத்துவச் சொற்பொழிவுகளை வழங்கி விட்டு, ஒரு நான்காண்டுகள் உலகப்பயணத்திற்குப் பின், 1897-இல் சென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது, ஒரு வார காலம், வி.இல்லத்தில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தார். அந்த அறை தற்போது (விரும்புபவர்கள்) தியானம் செய்ய பயன்படுகிறது.  தியானத்தையே மனிதனின் பல இடர்களுக்கு மருந்தாக சுவாமிஜி பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

வி.இல்லத்தை அரசு காலி செய்ய வற்புறுத்திய பிரச்சினைக்கு மீண்டும் வருவோம் !

இப்போது எல்லாமே தலைகீழாக மாறியது போலத் (அல்லது, முதல்வர் பெயரை அந்த தொழிலதிபர் தவறாகப் பயன்படுத்தியது போலத்) தெரிகிறது , முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபையில் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால் !!!  அதாவது,
 
விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  தமிழ் செம்மொழி ஆய்வு மையத்திற்காக விவேகானந்தர் இல்லத்தை இடிப்பது தொடர்பாக சட்டசபையில் இன்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பேசிய முதல்வர், விவேகானந்தர் மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்றும், விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்றும் கூறினார். 

என்ன தான் நடந்தது / நடக்கிறது / நடக்கப்போகிறது என்பது சுவாமிஜிக்கே வெளிச்சம் !!!! 

எ.அ.பாலா

நன்றி: தினமலர்

14 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

இதில் நிறைய விஷயங்கள் கவனிக்க வேண்டியுள்ளன.
1. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அந்தக் கட்டிடம் ஹெரிடேஜ் திட்டத்தின் கீழ் வரும்.
2. குத்தகை 2010 வரை இருக்கிறது எனக் கூறப்பட்டது. அவ்வாறிருக்க அந்தத் தொழிலதிபர் யார் வந்து இங்கு நாட்டாமை செய்வதற்கு?
3. இப்போதிருக்கும் அரசியல் நிலையில் தொழிலதிபர் நிஜமாகவே முதல்வர் கூறியதை ஃபார்வேர்ட் செய்திருக்கவும் சாத்தியக்கூறு உண்டு. அப்படியே இருந்தாலும் அவர் என்ன முதலமைச்சரின் பி.ஏ.வா?
4. அந்தத் தொழிலதிபர் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்வது அவசியம்.
5.//அந்த தொழிலதிபர், "முதல்வரிடம் நீங்கள் சொன்னதை தெரிவித்தேன். உங்கள் தலைவர் 23ம்தேதி சென்னை திரும்பியவுடன் 24ம்தேதி இடத்தை காலி செய்து விடுங்கள். அதன் பின் வேண்டுமானால் என்னை வந்து சந்திக்கட்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்" எனக் கூறினார்.//
என்ன ஆணவமான பேச்சு? முக்கியமான இத்தருணத்தில் முதல்வர் பார்க்க மாட்டாராம், ஆனால் விழாக்களில் குத்தாட்டம் போட்டால் மட்டும் ஆவென்று வாய் பிளந்து மணிக்கணக்கில் ரசிப்பாராம்.
6. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதியார் கூறியது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
7. தமிழகத்தில் ஆற்காட்டு வீராசாமி அவர்களின் தொட்டுக்கோ தொடச்சிக்கோ மின்சாரத்துக்கே பயங்கர வெட்டுகள் கோடையில் வரவிருக்கும் நிலையில் விவேகானந்தர் இல்ல விஷயம் தேவைதானா?
8. ஹூம், தமிழகத்துக்கு மோடி மாதிரி ஒரு முதன்மந்திரி இல்லாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

கருத்துக்கு நன்றி, ராகவன் சார் ! எது எப்படியிருப்பினும், வி.இல்லத்தை ராமகிருஷ்ணா மடத்திடமிருந்து பிடுங்காமல் இருந்தால் நல்லது.

said...

//என்ன தான் நடந்தது / நடக்கிறது / நடக்கப்போகிறது என்பது சுவாமிஜிக்கே வெளிச்சம் !!!! //
:))))

said...

"தமிழர்கள் ஹிந்துக்களே" என்று நிறுவும் சின்னம் விவேகானந்தர் இல்லம். ஹிந்து மதத்தின் தமிழ் வடிவை அகற்ற ஆபிரகாமிய நாசவாதிகள் விழைகின்றனர். கைக்கூலியான திராவிட கும்பல்கள், விவேகானந்தரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது தமிழர்களே என்ற உண்மையை அழிக்க விரும்புகின்றன. விவேகானந்தர் அமெரிக்கா செல்ல ஊக்கம் காட்டி அவரால் "தீரம் மிகு ஹிந்துக்கள்" என பாராட்டப்பட்டவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் பாராட்டிய தீரம் மிகு தெய்வீகத் தமிழர்களே, விழித்தெழுங்கள் ! தெய்வீக தமிழ் அருந்தி திராவிட இனவாத நஞ்சை அகற்றுங்கள் !

Thamizhan said...

அன்று விவேகானந்தர் சென்னையிலே பேசியபோது வேதம் பற்றி இவர் பேசக்கூடாது.வேதம் பற்றிப் பிராமணன் தான் பேசலாம் என்றனர்.கோபமடைந்த விவேகானந்தர் அங்குள்ளவர்களைத் திட்டி யாராவது என்னுடன் வேதம் பற்றி விவாதம் செய்யத் தயாரா என்று மடக்கினாராம்.
விவேகானந்தரின் அமெரிக்கப் பயணத்தைக் கவிழ்த்த தியோசாபிகலும்,பார்ப்பனர்களும் ஏமாற்றமடைய சூத்திர ராமநாத புர மன்னர் ஏற்பாடுகள் செய்தார்.

விவேகானந்தர் பார்ப்பனர்களைத் திட்டித் தீர்த்துள்ள மாதிரி வேறு யாரும் திட்ட வில்லை.மூடத்தனங்கள்,சாதிகள் ,ஒழிய வேண்டும்,மற்றவர்கள் உழைப்பில் உடல் வளர்க்கும் பார்ப்பனீயம் அடக்கப் பட வேண்டும் என்று துணிவுடன் கூறியவர்.
அவருடைய கீதையைப் பற்றிய கட்டுரைகள் அனைவரும் படிக்க வேண்டும்.
விவேகானந்தரின் மனித நேயக் கருத்துக்களை மூடி மறைத்து வரும் இன்றைய பார்ப்பனீயமும்,ராமகிருஷ்ண மடங்களும் விவேகானந்தரின் வாலைப் பிடித்துக் கொண்டு அலைவதும்,இந்துக்களே ஒன்று சேருங்கள் என்பதும் ந்ரித்தனமே.
உங்கள் பார்ப்பனீய இந்து மதத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கிழித்தெறிந்தவர் விவேகானந்தர் என்பதைப் பார்ப்பனரல்லாத இந்துக்கள் ந்ன்கு புரிந்து கொள்ள இந்த நாடகம் உதவட்டும்.

said...

தமிழன்,

விவேகானந்தர் பார்ப்பனர்களின் குறைகளைக் குறை சொல்லியிருப்பது உண்மை. அவர்களின் பெருமைகளைப் பற்றியும் அவர் பேசியிருக்கிறார். பார்ப்பனர்களை ஒட்டுமொத்தமாக அவர் குறை சொல்லவில்லை. குறையுள்ள பார்ப்பனர்களை மட்டும்தான், அதுவும் இந்தக் குறைகள்தான் பார்ப்பனீயம் என்று சொன்னவர்களைத்தான் அவர் குறை சொன்னார்.

ஏனெனில், ஆங்கிலக் கல்வி கற்ற ஒரு சில பார்ப்பனர்கள், ஜாதிவெறிதான் பார்ப்பனீயம் என்று ஆங்கிலேய கல்வி முறையால் தவறாகப் போதிக்கப்பட்டு அதை நம்பியவர்கள். இதைத்தான் விவேகானந்தர் எதிர்த்தார்.

அவருக்கு பொருளாதார உதவி செய்தவர் பார்ப்பனர் அல்லாதவர் என்பது உண்மைதான். ஆனால், விவேகானந்தர் அமெரிக்கா செல்ல வித்திட்டது ஒரு ஏழை ஐயங்கார் என்பது தெரியுமா?

அவரை அக்காலத்திலும், இக்காலத்திலும் பாராட்டி தெய்வமாக வணங்குபவர்கள், அவர் சொல்லுவதை அப்படியே பின்பற்றுபவர்களில் பலர் பார்ப்பனர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில், உங்களது மனம் திராவிட இனவாத அரசியலில் மூழ்கியிருக்கிறது.

அவர் எதிர்த்த ஜாதிவெறி பார்ப்பனர்களிடம் மட்டும்தான் இருந்தது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அவர் சொன்னது அந்தக் காலத்திலும் சரி, இந்தக்காலத்திலும் சரி. பார்ப்பனர்களுக்கு மட்டும் அல்ல. BC மற்றும் OBC மற்றும் SC மற்றும் ST என்று ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்ட ஜாதியார்களுக்கும் பொருந்தும். தலித்தை இகழும் சூத்திரருக்கும், மற்றொரு தலித்தை இகழும் இன்னொரு தலித்துக்கும் அது பொருத்தமானதே.

முதலில் விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அவருடைய புத்தகங்களை நேரடியாகப் படித்துவிட்டு வாருங்கள். வெறுமே எவனோ ஒரு அறிவுக்கூலி எழுதியதைப் படித்ததைப் பட்டியலிடாதீர்கள்.

அவருடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் நேரடியாகப் படித்தால் ஹிந்துத்வா என்னும் சமூக-அரசியல் கருத்துக்களை ஏற்படுத்தியது விவேகானந்தர் என்பது உங்களுக்குப் புரியும்.

ராமகிருஷ்ண மடம் மற்றும் பார்ப்பனர்கள் விவேகானந்தரின் எந்த மனித நேயக் கருத்துக்களை மூடி மறைத்தார்கள் என்பதை இங்கே சொல்லமுடியுமா?

எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தாற்போல ஆட்டம் போடுவதை நிறுத்துங்கள்.

said...

விவேகானந்தர் பார்ப்பனர்களை திட்டியதற்குக் காரணம், அவர்கள் திருந்துவார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். மற்ற சாதிக்காரர்கள் திருந்துவது மிகக் கடினம் என்பது இங்கே இருக்கும் கமெண்டுகளைப் பார்க்கும்போதே தெரிகிறது.

said...

//விவேகானந்தர் பார்ப்பனர்களை திட்டியதற்குக் காரணம், அவர்கள் திருந்துவார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். மற்ற சாதிக்காரர்கள் திருந்துவது மிகக் கடினம் என்பது இங்கே இருக்கும் கமெண்டுகளைப் பார்க்கும்போதே தெரிகிறது.//

மீசயில மண்ணே ஒட்டல...
இந்த பதிவுக்கு முதல் பின்னூட்டம் போட்டவரே ஜாதியை தூக்கிப் பிடிப்பவர்தானே, விவேகானதர் சொன்னதும் திருந்தீட்டாரா?

said...

>> மீசயில மண்ணே ஒட்டல...
இந்த பதிவுக்கு முதல் பின்னூட்டம் போட்டவரே ஜாதியை தூக்கிப் பிடிப்பவர்தானே, விவேகானதர் சொன்னதும் திருந்தீட்டாரா?<<

டோண்டு ராகவன் அவர்களைச் சொல்லுகிறீர்களா?

அவர் செய்வது ஜாதி வெறியல்ல.

ஒரு ஜாதியை இளிச்சவாய் ஜாதி என நினைத்து சிலர் கேவலமாகப் பேசும்போது, அந்த ஜாதி அப்படி அல்ல என்று சொல்லுகிறார். அப்படி சொல்வதற்கான கடமை அந்த ஜாதிக்காரருக்கு அதிகம்.

முதலில் ஜாதி வெறி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அடுத்த ஜாதி தாழ்ந்தது என்று நம்புவது, பேசுவது, எழுதுவது, நடப்பதுதான் ஜாதி வெறி.

டோண்டு அவர்கள் இவற்றில் எதையும் செய்தவர் இல்லை என என்னால் சொல்ல முடியும். ஆனால், அவரை திட்டுபவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதி இழிவானது என்று நம்புகிற, பேசுகிற, எழுதுகிற, நடந்துகொள்கிறவர்களாக இருக்கிறார்கள்.

இப்போது சொல்லும் ஐயா, யாருக்கு இருப்பது ஜாதி வெறி என்று.

said...

பாலா,

கல்கி பகவான் ஒரு போலி என்று டோண்டுவின் பதிவில் சொல்லியுள்ளீர்கள். அவர் போலி என்று உங்களுக்கு தோன்ற தெளிவான காரணங்கள் ஏதேனும் உண்டா?

நீங்கள் வணங்கும், நம்பும் கடவுள்(கள்) மட்டும் எப்படி நிஜமானவர்கள் என்று சொல்ல முடியும்?

நிஜமான சாமியார்கள் உள்ளனர் என்று நீங்கள் நம்பினால், அவர்கள் நிஜமானவர்கள் என்று நீங்கள் நம்பக் காரணங்கள் என்ன?

Thamizhan said...

எல்லாம் தெரிந்து ஆட்டம் போடும் அநாமதேயமே! உள்ளதைச் சொன்னால் உடம்பு எரிகிறதா?
விவேகானந்தர் தீண்டாமையைக் கடுமையாகச் சாடியிருக்கிறாரா இல்லையா?
இந்து மதம் பார்ப்பனர்களின் த்னிச் சொத்து ஆக்கப் பட்டுள்ளது,அது அனைவர்க்கும் பொது,சண்டாளர்களுக்கும் மந்திரங்கள்
சொல்லித் த்ரப்பட வேண்டும்.
பெண்கள் படிக்க வேண்டும்.
உழைக்காமல் உண்பவர்கள் அயோக்கியர்கள்.ஊரை ஏமாற்ற மதம்
பயன் படக் கூடாது.எத்தனை சாதி இந்துக்கள் எதை எதை எங்கெங்கெல்லாம் சாப்பிடுகிறார்கள்.
புத்த மதத் தாக்கம் இந்து மதத்தின் அடிப்படையை மாற்றி,கொல்லாமை
அடிப்படையாகி மிருக யாகங்கள் ஒழிந்தன.
இந்து மதத்தின் முன்னேற்றம் அனைவரும் ஒன்று,அவரவ்ர் உழைத்து மதத்தின் பெய்ரால் அடுத்தவரை ஏமாற்றி வாழாமல் பிழைக்க வேண்டும் என்று சொல்லிய எதையாவது இன்று அவர்கள் வெளியிடும் பதிப்புகளில் காண முடிகிறதா?
விவேகானந்தர் இந்து மத வெறியர்களுக்கு ஒரு வியாபார தந்திரம்,அதைச் சொன்னால் ஏன் எரிந்து அனைவரையும் வசை பாடுகிறீர்கள்?

enRenRum-anbudan.BALA said...

//கல்கி பகவான் ஒரு போலி என்று டோண்டுவின் பதிவில் சொல்லியுள்ளீர்கள். அவர் போலி என்று உங்களுக்கு தோன்ற தெளிவான காரணங்கள் ஏதேனும் உண்டா?
//
அவரை "வாழும் கடவுள்" என்று கூறிக் கொண்டு, அவரிடம் சென்று பணத்தைக் கொட்டும் மக்களைப் பார்த்துத் தான் அப்படி ஒரு முடிவுக்கு வந்தேன். 90% சாமியார்கள் அடிக்கிற கூத்தைப் பார்க்கும்போது, இவர்களை போலி என்று சொல்ல "தெளிவான" காரணம் வேறு வேண்டுமா என்ன ????

//
நீங்கள் வணங்கும், நம்பும் கடவுள்(கள்) மட்டும் எப்படி நிஜமானவர்கள் என்று சொல்ல முடியும்?
//
நான் வணங்கும் கடவுள், நம்பிக்கை (faith) சார்ந்த விஷயம். சாதாரண மனிதர்களை கடவுள் என்று சொல்லிக் கொண்டு நான் அலைய மாட்டேன் !

//நிஜமான சாமியார்கள் உள்ளனர் என்று நீங்கள் நம்பினால், அவர்கள் நிஜமானவர்கள் என்று நீங்கள் நம்பக் காரணங்கள் என்ன?
//
நிஜமான சாமியார்கள் என்று நான் நினைப்பவர்கள், ஒரு 500-600 ஆண்டுகளுக்கு முன்னரே காலாவதியாகி விட்டனர். Anyway, நிஜமான சாமியார்கள்,பணத்துக்கும், பக்தகோடிகளின் கூட்டத்திற்கும் அலைவதில்லை, அம்புடுதேன் !!!

எ.அ.பாலா

அரவிந்தன் said...

விவேகானந்தர் இல்லத்தின் மேலாளரை மிரட்டிய தொழிலதிபர் பற்றிய விவரங்களை வெளியிட அந்த மேலாளரக்கு என்ன தயக்கம்.?

அன்புடன்
அரவிந்தன்

said...

///அவரை "வாழும் கடவுள்" என்று கூறிக் கொண்டு, அவரிடம் சென்று பணத்தைக் கொட்டும் மக்களைப் பார்த்துத் தான் அப்படி ஒரு முடிவுக்கு வந்தேன். ////

அதாவது ஒருவரிடம் பணத்தை அவரது பக்தர்கள் கொட்டினால், அவர் கடவுள் இல்லை. ஏமாற்றுப் பேர்வழி. அப்படியானால், திருப்பதியில் இருக்கும் வெங்கடாஜலபதியும் ஏமாற்றுப் பேர்வழியா?


///நான் வணங்கும் கடவுள், நம்பிக்கை (faith) சார்ந்த விஷயம். சாதாரண மனிதர்களை கடவுள் என்று சொல்லிக் கொண்டு நான் அலைய மாட்டேன் !///

அப்படியா? நீங்கள் சாதாரண மனிதர் எனும் நம்பும் ஒருவரை, வேறு சிலர் கடவுள் என்பதும் நம்பிக்கை (faith) சார்ந்த விஷயம்தானே. அப்படி இருக்கும்போது அவருடைய நம்பிக்கை மட்டும் பொய்யானது, இள்ளிச்சவாய்த்தனமானது எனச் சொல்லுவதற்குக் காரணம் என்னவோ?

// நிஜமான சாமியார்கள் என்று நான் நினைப்பவர்கள், ஒரு 500-600 ஆண்டுகளுக்கு முன்னரே காலாவதியாகி விட்டனர்.//

500 - 600 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்கள் நிஜமான சாமியார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? உங்களுக்கு அடிக்கடி வஹி வருமோ?

// Anyway, நிஜமான சாமியார்கள்,பணத்துக்கும், பக்தகோடிகளின் கூட்டத்திற்கும் அலைவதில்லை, அம்புடுதேன் !!!//

கல்கி இதற்கெல்லாம் அலைந்தார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?

நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவிற்குக் கூட நோட்டீஸ் வினியோகிக்கக்கூடாது. ஏன், திருவிழாவே நடத்தக்கூடாது. ஏன், கோயிலே இருக்கக்கூடாது.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails